பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடர்கிறது
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தை நேற்று (10) இரவு 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசாங்கம் சார்பில் விசேட ஆவணம் ஒன்று தங்களிடம் சமர்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
அந்த ஆவணத்தில் இன்றைய நிலையில் எவ்வித சம்பள உயர்வும் வழங்க முடியாதெனவும் ஆனால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகையை அதிகரிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
எனினும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை விசேட பிரிவினராக மதித்து அரசாங்கம் செயற்படும் என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாக கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
தமது சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முடிவெடுக்கும்வரை அரசின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நிலைப்பாடு குறித்து தமது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply