த.தே.கூ. கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளது : விநாயகமூர்த்தி முரளிதரன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தால் எதிர்காலத்தில் எனது வாக்கைக்கூட அவர்களுக்கு அளித்திருப்பேன் என்றார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்து கோவில்போரதீவில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கோவில்போரதீவு பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யசோதரன்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு முக்கியஸ்தர் வரதன் உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்துப் பேசினர்.
அத்துடன் இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சிறுமிகள் இருவர்; கையில் வெற்றிலையுடன் அழகாக நடனமாடி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பாடியது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
அத்துடன் யாழ்.கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவி ஒருவரால் இங்கு கவிதை வாசிக்கப்பட்டது.
பிரசாரக் கூட்டம் நிறைவில் ஆதரவாளர்கள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வெற்றிலை வழங்கி தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply