ரணிலை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் மைத்திரிபால !

1994ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக வேட்பாளர் காமினி திஸாநாயக்கவிற்கு எதிராகவும் ஸ்ரீசுக வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஆதரவாகவும் செயற்பட்டமை குறித்து விவாதத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான இரகசிய ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக மைத்திரிபால சிறிசேன இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐதேக தலைவர் தனது பதவியை 6 வருடங்களுக்கு நீடித்துக் கொண்டதை அடுத்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க குறித்த இரகசியத்தை தான் வெளியிட்டால் பல ஐதேக உறுப்பினர்கள் ஐமசுமு யில் இணைந்து கொள்ள வாய்ப்புள்ளதென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதனால் எதிர்கட்சித் தலைவர் தகது குற்றச்சாட்டு குறித்து ஐதேக ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
எனவே 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் விடயம் குறித்து ரணில் விக்ரமசிங்கவை முகத்திற்கு முகம் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
இவ்வாறான பகிரங்க விவாதம் ஒன்றை பார்வையிட நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதாக மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply