அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் அலுவலகத்திற்கு பூட்டு
கேகாலை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் அலுவலகம் ஒன்று முத்திரை வைத்து மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதை அடுத்து அதற்கு முத்திரை வைத்து மூடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சார பதாகைகள் குறித்த அலுவலகத்தில் இருந்ததாக தேர்தல்கள் செயலகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடரந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையை அடுத்து குறித்த அலுவலகம் முத்திரை வைத்து மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply