இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு காலக் கெடு

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மின்சார விநியோக செயற்பாடுகளை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.இதற்கான பொறுப்புகள் இரகசிய காவற்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பகிறது.
 இதேவேளை, நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மின்சாரசபை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சமூகமளிக்காதவர்களுக்கு பதிலாக, ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக மின்சார சபை உப தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார்.
 
அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்பட்ட வேதனத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply