விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை

நீதவான்களுக்கான பற்றாக்குறையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தாமதமடையக் காரணம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உயர் நீதிமன்ற நீதவான்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே வழக்கு விசாரணைகளை துரித படுத்த முடியாமைக்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 75 ஆக இருக்கும் நீதவான்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்த்தப்பட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதவான்களின் எண்ணிக்கையையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நீதவான்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply