எஞ்சிய இலத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் இராஜதந்திர உறவு

இலத்தீன் அமெரிக்க நாடுகள் 13உடன் இலங்கை அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது.

இலங்கை அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்ரடூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய நாடுகளுடனேயே இலங்கை அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 33 நாடுகள் ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன.  இவற்றில் 20 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை விரிவாக்குவது, இலங்கையின் வெளிவிவகார கொள்கையில் முன்நோக்கிய மற்றொரு அடி’ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply