நுரைச்சோலை அனல்மின் நிலைய கோளாறை சரி செய்ய சீனா குழு
புத்தளம் – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை சரி செய்ய சீனாவில் இருந்து விசேட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
கோளாறை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினரோடு புதிய குழுவினரும் இணைந்து செயற்படுவர் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 27ம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் 3 மணித்தியாலம் மற்றும் 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் உப தலைவர் அநுர விஜேபால குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply