தமிழக முகாமில் இலங்கை அகதிகள் உண்ணாவிரம்
தமிழகத்தில் இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மூடுமாறு கோரி, இலங்கை அகதி ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு மேலும் 8 பேர் இணைந்துக் கொண்டுள்ளனர்.
கடந்த ஒன்பது தினங்களாக செந்தூரன் என்ற அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.
அவருக்கு ஆதரவாக குறித்த எட்டு அகதிகளும் நேற்று வரையில் சுழற்சி முறையில் போராட்டங்களை நடத்திவந்தனர்.
எனினும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவருடன் பேச்சுவார்த்தை நடத்த அரச அதிகாரிகள் யாரும் முன்வராத நிலையில், நேற்று முதல் அவர்கள் எட்டு பேரும் தொடர்சியான உணவுத்தவிர்ப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரையில் இந்த உணவுத் தவிர்ப்பு இடம்பெறும் என அகதிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply