அமைச்சர் மைத்திரிபால சந்திரிகாவுக்கு எதிராக செயற்பட்டார்
கடந்த 1994ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தேர்தலின் போது எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் காமினி திஸாநாயக்கவுக்கு எதிராக செயற்பட்டதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன 1994ம் ஆண்டு தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு எதிராக செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த 2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மௌன கொள்கை ஒன்றையும் பின்பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்களசமரவீர, 1994ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவின் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply