இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கம் தேவை

இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு குறித்த வழக்கு தொடர்பாக, சென்னை உச்ச நீதிமன்றம் மதுரை கிளையில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் தமிழக அரசின் தலைமை சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் வாதிட்டனர்.

இந்திய மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் ஸ்டாலின் உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ஜனார்த்தனராஜா மற்றும் விஜயராகவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவி வாதிட்டதாவது, இந்திய மீனவர்கள் (குறிப்பாக தமிழக மீனவர்கள்) இந்திய எல்லையை தாண்டி, இலங்கை எல்லைக்கு சென்று மீன் பிடிக்கும் போது தான் தாக்கப்படுவதாகவும், இந்திய எல்லையில் தாக்கப்படுவதில்லை என்று கூறினார்.

மாநில அரசு சார்பில் வாதி‌ட்ட தமிழக அரசின் தலைமை சட்டத்தரணி நவநீதகிருஷ்ணன், இந்திய எல்லையில் தான் மீனவர்கள் தாக்கப்படுவதாகவும், இலங்கை எல்லையில் தாக்குதல் நடைபெற்றால், தாங்கள் ஏன் அதுபற்றி பேசுவதாக அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் வழக்குபதிவு குறித்து விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தனர். இதுகுறித்து, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply