ஈராக்கில் கார்க் குண்டு வெடிப்பு தொடர்கிறது! நேற்றைய சம்பவத்தில் 27 பேர் பலி

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற கார் குண்டுகள் வெடிப்பில் 32 பேர் பலியானார்கள். 120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இதனால் அந்த நாளை, துக்க நாள் என அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் நேற்று பாக்தாத் நகருக்கு அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு வெளியே கார் குண்டு வெடித்தது.

இதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

அமெரிக்க படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறியபிறகு, அந்நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

மேலும் அல்-கொய்தா தலைவரின் சமீபத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈராக்கில் உள்ள தீவிரவாத குழுக்கள் ஒன்றிணைந்து தற்போது தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply