சுயாதீனமான முறையில் கடயைமாற்ற முடியாது – பதவி விலகிய திலக் கருணாரட்ன

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து திலக் கருணாரட்ன இன்று ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்டையில் தனது ராஜினாமாக கடிதத்தை நிதியமைச்சிடம் அவர் நேற்று கையளித்துள்ளார்.

தனது பணிகளைச் சுயாதீனமான முறையில் கடயைமாற்ற முடியாத காரணத்தினாலேயே தான் பதவி விலகுவதாக  கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையை சீரழித்த சிலரினால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த இராஜினாமா கடிதத்தினை நிதி அமைச்சின் ஊடாக ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளேன்.

எனவே பங்குச் சந்தையை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது விட்டால் தொடர்ந்தும் பதவி வகிப்பதில் எதுவிதமான அர்த்தமும் கிடையாது.

இதற்கமைய சுயாதீனமாக செயற்படக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என திலக் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply