விரிவுரையாளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்

பல்கலைகழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டமானது அவர்களது தகைமைகளுக்கு ஏற்புடையதல்ல உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் என்பவர்கள் நன்றாக கல்வி பயின்ற புத்தஜீவிகள் என சுட்டிக்காட்டிய அவர், ஏனைய போராட்டக்காரர்களை போல இவர்களும் இவர்களும் போராடுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு செயற்பாடு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply