அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 98 இலங்கையர்கள் ​கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 98 இலங்கையர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அண் மிஷால்´ எனப்படும் படகில் இருந்து 1 பெண் அடங்களாக 53 தமிழர்களும் 24 சிங்களவர்களுமாக மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றைய படகில் இருந்து 19 தமிழர்கள் 2 முஸ்லிம்கள் அடங்களாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளார்.

சிலாபம் மேற்கு கடற் பகுதி மற்றும் மட்டக்களப்பு கிழக்கு கடற் பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், வவுனியா, மூதூர், புத்தளம், கல்கமுவ, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, கிண்ணியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கவென திருகோணமலை மற்றும் மோதர துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply