மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு முற்றாக நிறுத்தப்பட்டது

பாணந்துறை கடற்பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் சைப்பிரஸ் நாட்டுக்கு சொந்தமான கப்பலில் இருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கடற்பகுதியில் கசிந்துள்ள எண்ணெயை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் ரியல் அத்மிரல் எஸ்.ஆர்.சமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடல் அலைகளின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில்இ மீண்டும் இந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply