இலங்கைப் படையினரின் பயிற்சிக்கு எதிரான ஜெயாவின் எதிர்ப்பு பரிசீலனை – மத்திய அரசு
உதகையில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள எதிர்ப்பைப் பரிசீலிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‘வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலிக்கும்,’ என்றார்.
வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவருக்கு இந்திய ராணுவம் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது.
ஏற்கெனவே தாம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு காட்டியதால், அவர்களை வேறு முகாமுக்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply