அவுஸ்திரேலிய படகு பயணத்தில் 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த இலங்கை மக்கள் சிலர் மாத்தறை, மிரிஸ்ச பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் காலி கடற்பரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply