கைதிகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான முறையில் நடத்தப்பட வேண்டும்!
நாட்டின் சகல கைதிகளும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டுமென இலங்கை கத்தோலிக்க பேராயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாடு எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைதிகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான முறையில் நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் சில கைதிகள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக கதோலிக்க பேராயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
அனைத்து கைதிகளும் சுயகௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே சர்வதேச சட்டம் என சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும், பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் சில காலம் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கத்தோலிக்க பேராயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply