தேர்தல் கடமைகளில் 35 ஆயிரம் உத்தியோகத்தர்கள்
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளின் நிமித்தம் கொழும்பிலிருந்து இன்று உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 35 ஆயிரம் உத்தியோகத்தர்களை இந்த தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த உத்தியோகத்தர்கள் நாளை முதல் தமக்குரிய வாக்குச்சாவடிகள் மற்றும் பணியிடங்களுக்கு சமூகமளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்குப் பெட்டிகளையும் ஏனைய பொருட்களையும் நாளை காலை முதல் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்களிப்பு இடம்பெறவுள்ள மாவட்டங்களில் அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
வாக்குச் சாவடிகளிலும் அவற்றுக்கு வெளியிலும் சகல தேர்தல் கடமைகளையும் கண்காணிப்பதற்காக இம்முறை விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply