இலங்கை அகதிகளால் அவுஸ்திரேலியாவிற்கு பெருஞ் செலவு
இலங்கையில் இருந்து அதிக அளவான அகதிகள் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு செல்வதால், அங்கு அதிக நிர்வாக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வானூர்தி சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. கொக்கோஸ் தீவுகளுக்கு 1000க்கும் அதிகமான அகதிகள் சென்றுள்ளனர்.
அவர்களை கிறிஸ்மஸ் தீவு மற்றும் ட்ராவின் முகாம் போன்றவற்றுக்கு மாற்றுவதற்கு வானூர்திகளே பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக கடந்த ஜிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2.7 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply