இலங்கையில் இருந்து வருபவர்களை நட்பு ரீதியிலேயே அணுக வேண்டும்!
இலங்கையில் இருந்து வருபவர்களை நட்பு ரீதியிலேயே அணுக வேண்டும் என்று பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்,
இலங்கையில் இருந்து கோயிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது துரதிருஷ்டவசமானது. தமிழகம் மற்றும் இலங்கையில் வசிக்கும் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் இருக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து வருபவர்களை நட்பு ரீதியிலேயே அணுக வேண்டும். இலங்கை தமிழர்கள் பிரச்னையில் அரசுகளுக்கு இடையேதான் பேச்சு நடைபெற வேண்டும். இரு நாட்டு மக்களும் மோதிக் கொள்வது ஏற்புடையதல்ல என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply