தேர்தல்களுக்கான சகல பணிகளும் நிறைவு

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குபதவு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளும், ஆவனங்களும் இன்றைய தினம் மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படவுள்ளன.

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் உள்ள 7 மாவட்டங்களில், மொத்தமா 3 ஆயிரத்து 247 வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை தேர்தல் நடைபெறுகின்ற மாகாணங்களின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply