பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் இலங்கை வருகின்றனர்
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 58வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 54 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இன்றும் நாளையும் இலங்கை வரவுள்ளனர்.
குறித்த நாடுகளின் சபாநாயகர்களும், சிரேஷ்ட அமைச்சர்களுமாக 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இன்றும் (07) நாளையும் (08) இலங்கை வரவுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 58வது மாநாட்டு இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 11 ஆம் திகதி முற்பகல் தாமரை தடாகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், நடைபெறும் மிகப் பெரிய சர்வதேச மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply