இந்தியாவிற்கு செப்டெம்பர் 19ம் திகதி செல்வேன்

எதிர்வரும் செப்டெம்பர் 19ம் திகதி தான் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளாதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்த பொறுப்பை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பிரதானிகளை இன்று அலரி மாளிகையில் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக மதிமுக இலங்கை ஜனாதிபதிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply