அவுஸ்திரேலியா அனுப்புமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியா வந்து மீண்டும் படகு மூலம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 53 பேர் இந்தோனேசியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தம்மை ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்றுகோரி தடுத்து வைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த தமிழோசையிடம் பேசிய அமல்ராஜ் என்பவர், தம்மை குடிபெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனமான ஐஒஎம்-இடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது இந்தோனேசியாவில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவேண்டும் அல்லது தமது பயணத்தைத் தொடர 2000 லீட்டர் டீசல் வழங்க வேண்டும் என்று கோரியே போராட்டம் நடப்பதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் மென்டாவி தீவின் உள்ளூர் நிர்வாகத்தின் துணைத் தலைவர் யூதாஸ் சபாகலேட்டிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, கடந்த வாரம் இரண்டு படகுகளில் இலங்கைத் தமிழர்கள் வந்ததாகக் கூறினார்.

முதல் படகில் 43 பேரும் இரண்டாம் படகில் 53 பேரும் வந்ததாகவும், இரண்டாம் படகில் வந்தோர் தான் தற்போது உண்ணாவிரதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் அகதிகளோடு பேசுவதாகவும் யூதாஸ் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்தபின்னர் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பலர் ஆபத்தான கடல் பயணம் மூலம் அவுஸ்திரேலியா செல்வது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசும் இவ்வாறு சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் இலங்கையில் இருந்து ,அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டோர் நூற்றுக்கணக்கில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply