இலங்கைக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது பெருமை – ஏ.கே. சிங்

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இந்தியதென் பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஏ.கே. சிங் ஒப்புக் கொண்டுள்ளார். பல்வேறு துறைகளில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பெற்றுக் கொள்ளும் பயிற்சிகளின் மூலம் தமது திறமைகளில் விருத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் படையினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், லெப்டினன் ஜெனரல் ஏ.கே. சிங்கின் கருத்துசர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக தமிழகத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக்கூடாது என முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதுதொடர்பில் பெருமிதமாக ஏ.கே. சிங் கருத்துரைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply