மீண்டும் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பிரேம்லால் திஸாநாயக்க ?

வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவு செய்யப்படலாம் என அரச நம்பகரத்தரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது இவ்விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க இம்முறை வடமத்திய மாகாண சபை தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அம்மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எஸ்.எம். ரஞ்ஜித் என்பவர் 105, 232 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் பேர்ட்டி பிரேம்லால் 95,027 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply