இலங்கை அரசாங்கம் கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்
இலங்கை அரசாங்கம் கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட்டா பிளக்மான் தெரிவித்துள்ளார்.மீள் அபிவிருத்தி மற்றம் நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டுமெனகுறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத் தன்யுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் பாரியளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தோன்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதேச மக்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் வகையிலான அதிகாரப் பகிர்வு தீர்வினை வழங்குவது பொருத்தமான அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய பயண எச்சரிக்கை தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுமேபேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply