முப்பது நாடுகளின் யுத்தக் கப்பல்கள் கூட்டுப் பயிற்சி
கடலுக்கடியில் புதைக்கப்படும் கண்ணிவெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை எப்படி சமாளிப்பது என்று அமெரிக்கா தலைமையில் பயிற்சியெடுப்பதற்காக முப்பது நாடுகளைச் சேர்ந்த யுத்தக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனை ஒட்டிய கடல்பரப்பில் சங்கமித்துள்ளன.
மத்திய கிழக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதாக நடத்தப்படும் இப்படியான ஒரு கடற்படைப் பயிற்சி இது என்று கூறப்படுகிறது.
கடலுக்கடியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டால் அதனை எப்படிக் கண்டறிவது, என்பது அகற்றுவது, மற்றவர்களை உஷார் படுத்துவது என்றெல்லாம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்து பார்ப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.
இந்தப் பயிற்சி நடவடிக்கை இரான் பற்றி எவ்விதத்திலும் பேசவில்லை என்றாலும், வளைகுடாப் பகுதியில் கடலுக்கடியில் கண்ணி வெடிகளைப் புதைக்க இரான் முயன்றால் அது சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாக அமையும் என்ற நோக்கில்தான் இந்த பயிற்சி நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இஸ்ரேலோ அமெரிக்காவோ தங்களைத் தாக்கினால் கடலுக்கடியில் கண்ணிவெடிகளை வைப்போம் என இரான் எச்சரித்திருந்தது. ஆகவே ஈரான் அந்தப் பாதையில் செல்லக்கூடாது என்று எச்சரிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த கூட்டுப் பயிற்சியைக் கருத இடமுண்டு.
இந்தக் கூட்டுப் பயிற்சி ஒரு புறமிருக்க, வழமைக்கு மாறாக தற்போது அமெரிக்காவின் மூன்று விமானதாங்கி யுத்தக் கப்பல்கள் வளைகுடாப் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கின்றன. அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply