பொதுநலவாயநாடுகளின் அடுத்த மாநாட்டில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் வெளிக்காட்டப்படும்
எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயநாடுகள் தலைவர்கள் மாநாட்டில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் வெளிக்காட்டப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில்உலக சமூகத்திற்கு எடுத்தியம்ப பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சமாதான நிலைமைகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் நேரடியாக பார்வையிட்டு விளங்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போலிப் பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply