முஸ்லிம் காங்கிரஸ் அரசிற்கு ஆதரவு: கிழக்கின் புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்
கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்தவகையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது.
மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களான எம்.மன்சூர்இ ஏ.எம்.ஜெமீல் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் ஆகிய நான்கு பேரில் இருவருக்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply