ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் மரணம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் நேற்று தீக்குளித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர், இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் “இந்தியாவுக்கு ராஜபக்ஷ வருவதைத் தடுக்க வேண்டும்” என்று முழக்கமிட்டவாறே திங்கட்கிழமை காலை சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடலில் 80 சதம் தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 21ம் நாள் மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார்.
அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply