இலங்கையில் பாகிஸ்தானிய உளவு துறையின் செயற்பாடுகள்

திருச்சி வானூர்தி நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டவரின் தகவல் அடிப்படையில் இலங்கையில் பாகிஸ்தானிய உளவு துறையான ஐ.எஸ்.ஜ. யின் செயற்பாடுகள் தொடர்வதாக பெஸ்ட் போஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்;ட தமீன் ஹன்சாரி என்பவரிடம் இந்தியா இராணுத்தின் இரகசியங்கள் அடங்கிய இறுவட்டு இந்திய காவல் துறையினால் கைப்ப்றப்பட்டது.

இந்த இறுவட்டை தமீன், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் கடமையற்றும் இருவரிடம் கையளிக்கவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த இறுவட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெளிங்டன் இரணுவ பயிற்சி கல்லூரி, காரைக்கால் துறைமுகம் போன்றவற்றின் புகைப்படங்கள் அடங்கியிருந்தன.

அத்துடன், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் தரிப்பிடங்கள் உட்பட இந்திய கடற்படையின் தளங்கள் போன்றவற்றின் படங்களும் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கோரப்பட்டிருந்ததாக ஐ ஏ என் எஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததன் அடிப்படையில் இலங்கையில் இருப்பதாக கூறப்படும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு சர்வதேச காவல்துறையில் உதவி இந்தியாவால் கோரப்பட்டுள்ளதாகவும் பெஸ்ட் போஸ்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில்,  ஹன்சாரியின் கைதை அடுத்து பாகிஸ்தானின் உளவு துறையின் செயற்பாடுகள் இன்னும் தென்னிந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரலாம் என்ற சந்தேகம் இந்திய தரப்பிற்கு ஏற்பட்டுள்ளதாக தி ஏசியன் ஏஜ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஸரப் நீண்டகால அடிப்படையில் சேவையாற்றுவதற்காகஇ அதன் உயர்ஸ்த்தனிகராக பசீர் வாலி என்ற பாகிஸ்தானிய உளவு துறை அதிகாரியை நியமித்த விடயத்தையும் தி ஏசியன் ஏஜ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply