“டீன் ஏஜ்’ வயதில் எம்.பி.,: உகாண்டா பெண் அசத்தல்

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், யோவேரி முசவானா ஆட்சி நடக்கிறது. மக்களின் அதிருப்தி காரணமாக, இதுவரை நடந்த எட்டு இடைத் தேர்தலில், யோவேரி நிறுத்திய வேட்பாளர்களில், ஏழு பேர் படுதோல்வியை சந்தித்தனர். கிழக்கு உகாண்டாவில், கடாஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி., ஜான் ஒரோமேட், கடந்த ஜூலை மாதம் காலமானார். இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொடர் தோல்வியை சந்தித்து வந்த அதிபர் யோவேரி, எப்படியாவது இம்முறை வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என நினைத்தார்.

 பல வேட்பாளர்கள் பெயரை பரிசீலித்து சோர்ந்து போன நிலையில், மறைந்த எம்.பி., மகளை வேட்பாளர் ஆக்கலாம் என, ஒருவர் யோசனை கூறினார். கடந்த ஆண்டு தான், பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருந்தார் அலெங்கோ ஒரோமேட், 19. அடுத்து, உகாண்டா கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்வதற்கு இருந்தார்.

அதிபர் யோவேரியின் வற்புறுத்தலால், வேட்பாளரானார் அலெங்கோ. தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாயின. இதில், அலெங்கோ அதிக ஓட்டுகள் பெற்று, அமோக வெற்றி பெற்றார். அனுபவமும் இல்லாத அலெங்கோவை, வேட்பாளராக அறிவித்ததற்கு, ஆளும் கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், வயது ஒரு பொருட்டல்ல; எம்.பி., ஆவதற்கு மூளை தான் முக்கியம் எனக் கூறி, எதிர்ப்பாளர்களின் வாயை அடக்கி சமாளித்தார் யோவேரி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply