இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் இன்றிரவு விருந்தளிப்பு

தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்தார். அவர் இன்றைய தினம் மாலை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இரவு விருந்தில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமரைத் தவிர ஏனைய சிரேஸ்ட தலைவர்களுடனும் ஜனாதிபதி சந்திப்பு நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
 
இரு தரப்பு உறவுகள், தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள போதும், தமிழகத்தின் ஏனைய பல அதிகாரிகள் இந்த பல்கலைக்கழக திறப்பு விழாவிற்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்திய – மத்திய பிரதேஸ் – சாஞ்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள தர்ம தம்ம பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டுவதற்காக, வைகோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். எனினும், அவர்களை மத்திய பிரதேச எல்லையிலேயே பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
 
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமே என்று த பயனியர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழகத்தின் ஏனைய பல்வேறு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் தங்களுக்கான ஆசனங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply