பாகிஸ்தானில் வெளிநாட்டு தூதரக வளாகம் முற்றுகை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த முற்றுகை சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவப்படம் மற்றும் அமெரிக்க கொடியை தீவைத்து எரித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply