தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்வதில் உண்மை எதுவுமில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மிகவும் சுதந்திரமான முறையில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற மாவட்டங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைந்துள்ளதாகவும் சில தரப்பினர் இதற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட போது அமைதி காத்த தரப்பினரே இன்று, அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என்பதனை சர்வதேச சமூகம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அதற்கு எவ்வித தடைகளும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகள் மக்களை விரட்டியடித்த போது அமைதி காத்த தரப்பினர் தற்போது வடக்கு கிழக்கில் பலவந்தமாக குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெருமளவிலான தமிழர்கள் தெற்கில் குடியேறிய போதும் இவர்கள் மௌனம் காத்து வந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply