தனியான ஈழ இராஜ்ஜியம் தொடர்பான மனு ஒத்திவைப்பு
தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளிட்ட நான்கு தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஈழம் இராஜ்ஜியமொன்றிற்காக முன்நிற்பதாக அறிவித்தல் விடுக்குமாறு சுவர்ணஹங்ச மன்றம் விடுத்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதை டிசம்பர் மாதம் 12ஆத் திகதி வரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஏ.பீ.ஏ.ரத்நாயக்க, சத்ரா ஏக்கநாயக்க மற்றும் எஸ்.ஐ.இமாம் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு இன்று ஆராயப்பட்டது.
சுவர்ணஹங்ச மன்றத்தின் ஸ்தாபகரான கால்லகெ புண்யவர்தன என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திம்பு பேச்சுவார்த்தையின்போது டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், டி.யூ.எல்.எவ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன திம்பு கோட்பாடுகளை உருவாக்கி தனியான இராஜ்ஜியமொன்றை நிறுவுவதற்கு முன்நின்றதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அந்த அமைப்புக்கள் தமது தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அரசியல் கொள்கைகளின் ஈழ இராஜ்ஜியம் தொடர்பிலான கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருப்பதாகவும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply