பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல்!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக உயர்ஸ்தானிகராலயப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  உயர்ஸ்தானிகராலயத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் வீசி எறிந்துள்ளனர். இதனால் உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டடத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

பொதுபல சேனா மற்றும் சில ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் சில பகுதிகளில் பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்தர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்துஇ இலங்கையில் அமைந்துள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் காரணமாக தூதரக அதிகாரிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்இ இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் வாழ் பௌத்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply