அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளது

அரசாங்கம் மிகப் பாரிய நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை குறைப்பதற்கு பதிலாக அரசாங்கம், முக்கியமான செலவுகளை குறைக்க முயற்சிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்கல்வி போன்ற முக்கிய துறைகளுக்கு போதியளவு நிதி ஒதுக்காது, பாதைகள் அமைத்தல் மற்றும் நடைபாதைகளை அழகு படுத்தல் போன்றவற்றுக்கு அரசாங்கம் பாரியளவில் நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டில் உயர்கல்விக்கான முதலீட்டு செலவுகளை அரசாங்கம் 47 வீதத்தினால் குறைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலவசக் கல்வியை வழங்குவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும், மக்கள் இலவசக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் பணத்தை செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை குறைப்பதற்காக பொருட்கள் சேவைகளின் விலைகளை மேலும் உயர்த்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply