நைஜீரிய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கடுனா மாநிலம். இங்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்குள் நேற்று அதிகாலை துப்பாக்கி ஏந்திய ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அந்த கும்பல் கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொன்றது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பாலும் மசூதியை விட்டு வெளியே வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் சுற்றிவரும் துப்பாக்கி ஏந்தியக் கொள்ளை கும்பலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் கொள்ளை அடிப்பதற்காக இக்கிராமத்திற்குள் புகுந்த இந்த கும்பல் அக்கிராமத்தினரிடையே மாட்டிக்கொண்டு சிலர் உயிரைவிட்டுள்ளனர். அதற்கு பலி வாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கொள்ளையில் ஈடுபட்டுவரும் கும்பல்கள் மக்களை பயமுறுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. கடுனா மாநிலத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply