ஜனாதிபதி மஹிந்த குவைத் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) குவைத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைத்தில் இடம்பெறவுள்ள ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி குவைத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று ஆரம்பமாகவுள்ள இம்மாநாடு நாளை மறுதினம் முடிவடைகிறது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னர், குவைத் மன்னர் மற்றும் பல நாட்டு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply