திவிநேகும சட்டத்திற்கு எதிராக எதிரணி தலைவர்கள் வழக்கு தாக்கல்

வாழ்வின் எழுச்சி என்ற திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்தின, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சி தலைவர்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

பிரபல மனித உரிமை சட்டத்தரணி கிரிசாந்த வெலியாமுன்ன இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 18 ம் திகதி வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் நடைபெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply