இலங்கை அகதிகள் ஐவர் விடுதலை

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து மேலும் 5 ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  ஜெயதாசன், அலெக்ஸ், நாகராசா, நர்மதன், சதாசிவன் ஆகிய ஐவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னர் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டங்களின் போது காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் படிப்படியாக முகாம் தமிழர்கள் விடுதலை செய்யப்படுவர் என உறுதியாகக் கூறினார்.

அதன்படி சென்ற மாதம் ஏழு பேரும், இம்மாதம் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply