நட்சத்திர ஹோட்டலை 99வருட குத்தகைக்கு விடும் அரசு

கற்பிட்டி உல்லாசப் பயணத்துறை வலயத்துக்குட்பட்ட உச்சிமுனைத் தீவின் சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் நட்சத்திர ஹோட்டலொன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த நிலப்பரப்பினை 107 கோடி ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரையறுக்கப்பட்ட செபயர் பே ரிசோர்ட் (தனியார்) நிறுவனத்தினால் மேற்படி ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஹோட்டல் நிர்மாணத்துக்காக மேற்படி நிறுவனத்தினால் 16 கோடி அமெரிக்க டொலர்களை செலவிட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சுமார் 810 உல்லாசப் பயண அறைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அந்தவகையில் 150 அறைகள் கொண்ட ஸ்பா ஹோட்டலொன்றும், அதிசொகுசு வாய்ந்த அறைகள் 150 அடங்கிய 5 நட்சத்திர ஹோட்டலொன்றும், 150 அறைகள் கொண்ட களப்பு பிரதேச விலா ஹோட்டலொன்றும், கொல்ப் விளையாட்டு மைதானமொன்றும் இந்த ஹோட்டல் நிர்மாணத்துக்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply