இலங்கை தமிழர் குறித்த பிரதமரின் வாக்கு மன நிறைவை தருகிறது
டெசோ மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றினாலே இலங்கை தமிழர் பிரச்னைக்கு பெருமளவு தீர்வு ஏற்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனையும் சந்தித்து உரையாடியது பற்றி?
வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வரும் இராணுவ மயமாக்கலை தடுப்பதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிகாரப் பகிர்வு கோருகின்ற இந்த நேரத்தில், இலங்கை அரசு அவசர சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பறித்து வருவதாகவும் முறையிட்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் கவுரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதிலிருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்றும் பிரதமர் உறுதியளித்ததாக கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது மன நிறைவை தருகிறது.
டெசோ மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்துமே இந்தக் கருத்துக்களை உள்ளடக்கிதான் அமைந்திருக்கின்றன. அந்தத் தீர்மானங்களை இந்திய அரசும், ஐ.நா. மன்றமும் நிறைவேற்றினாலே இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பெருமளவுக்கு தீர்வு காண முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply