ஆசியாவை விளையாட்டு மைதானமாக எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது
ஆசியாவை விளையாட்டு மைதானமாக எவரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்தை எந்தச் சக்தியும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் சொத்துக்கள், மனித வளம், இயற்கை வளம் உள்ளிட்ட பயன்படுத்திக் கொள்ள பலர் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குவைட்டில் இன்று ஆரம்பமான ஆசிய கூட்டுறவு பேச்சுவார்த்தை அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசியா மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய கண்டத்தை மீளக் கட்டியெழுப்ப அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம், கடற்கொள்ளை, இயற்கை அனர்த்தம், சுற்றாடல் மாசுறுதல், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஆசிய பிராந்திய வலய நாடுகள் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply