வட மாகாண தேர்தலை விரைவில் நடத்த கூட்டமைப்பு முயற்சி
தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றத்தின் ஊடாக வட மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த முயற்சிப்பதாக, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இயக்கத்தின் இணைத் தலைவர் வசந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். திவி நெகும சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, வடமாகாணசபையின் சார்பாக வடமாகாண ஆளுனரிடம் ஒப்புதல் பெறுவதை ஆட்சேபித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதன் மூலம் வடமாகாண ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்ற அளவில் அங்கு மாகாண சபையை அமைக்க வேண்டிய அவசியம் ஒன்று ஏற்படும்.
எனவே வடமாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஒன்று அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வழக்கின் மூலம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 13ம் அரசியல் அமைப்பில் இருந்து காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை கூடிய விரைவில் நீக்க வேண்டும் என்றும், வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசியல் அமைப்பில் இருந்து இந்த அதிகாரங்களை நீக்கும் பட்சத்தில், இந்த சட்டத்தை அமுலாக்க வேண்டிய அழுத்தங்கள் ஏற்படும் பட்சத்தில், அதனை சமாளிக்கக்கூடிய பலத்தை பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 13ம் அரசியல் அமைப்பை அமுலாக்குவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த அழுத்தங்களை சமாளிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3ல் 2 பெரும்பான்மை பெற முடியாத பட்சத்தில், மக்களிடம் கருத்துக் கணிப்பை மேற்கொண்டேனும் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை நீக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply