செந்தூரனை விடுதலை செய்யக் கோரி மறியல் போராட்டம்! 50 பேர் கைது

இலங்கை தமிழர் செந்தூரன் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ஈழத்தமிழர் உரிமைகள் பறிக்கபடுவதாக கூறி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் காவலை நீட்டிக்க திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நேற்று அவரை பொலிசார் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவரது பொலிஸ் காவலை மேலும் 15 நாள் நீட்டித்து மாஜிஸ்திரேட்டு கோவிந்தராஜ் உத்தரவிட்டார். அவரை மீண்டும் புழல் ஜெயிலுக்கு வானில் ஏற்றி பொசார் அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை ஏற்றி சென்ற பொலிஸ் வான் முன்பு நாம் தமிழர் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் புரட்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மறியல் செய்தனர். ‘செந்தூரனை’ விடுதலை செய் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருவொற்றியூர் பொலிஸ் உதவி கமிஷனர் மாடசாமி கைது செய்தார். முன்னதாக, கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஏழுமலை தலைமை தாங்கினார்.

கட்சி நிர்வாகிகள் கோகுல், சுந்தர மூர்த்தி, தையல் ராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply